நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Entertainment || Enthiran || Feature || Topnews � எந்திரன் ரெடி வரும் 31-ந்தேதி பாடல்
எந்திரன் ரெடி வரும் 31-ந்தேதி பாடல்
Posted by Editor on 12:53 PM // 0 commentsஎந்திரன் ரெடி! அப்புறமென்ன பாடல் வெளியீட்டுவிழாதானே பாக்கி ஆமா. மலேசியாவில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறது எந்திரன் டீம். தமிழக ரசிகர்களை ஏமாற்றக்கூடது என்பதற்காக சென்னையிலும் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த திட்டமாம். வரும் 31-ந்தேதி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடக்கவுள்ள விழாவில் ரஜினி,அமிதாப்பச்சன், அபிசேக்பச்சன்,ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர்.
உலகம் முழுவதும் எந்திரன் படத்தை திரையிடவுள்ள எச்பிஓ நிறுவனம் இந்த பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகளில் பங்கு வகிக்கிறது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் எந்திரன் திரையிடப்படவுள்ளதாம். ஸ்பைடர் மேன் படத்துக்குப் பின்னர் ஒரு படம் இந்த அளவுக்கு அதிக தியேட்டர்களில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.
சிவாஜிக்கு பிறகு ரஜினியும் ஷங்கரும் அதிகம் மெனக்கெட்டு உருவாக்கியிருக்கிறார்கள் எந்திரனை. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த எந்திரன்தான் இந்திய திரையுலகின் மகா எதிர்பார்ப்பு. சைனா, ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இவ்விரு நாடுகளிலும் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம். இந்த காட்சிகளில் ரஜினி நேரில் ஆஜராகி ரசிகர்களை குஷிப்படுத்தப் போகிறாராம்.
ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டு விட முடிவு செய்துள்ளார் ஷங்கர். இதற்காக எடிட்டர் ஆண்டனி டிரைலரை ரெடி செய்து ஏ.ஆர்.ரகுமானிடம் ரீ.ரிக்கார்டிங் செய்ய அனுப்பியிருக்கிறார்.
டிரைலர் ஏ.ஆர்.ரகுமானை மிரட்டும் விதத்தில் அமைந்திருந்ததாம். இப்படி ஒரு டிரைலரை இதுவரை பார்த்ததில்லை என்று ஆண்டனியை அழைத்து வெகு நேரம் பாராட்டியிருக்கிறார் ரகுமான்.
எதிர்பார்த்தப்படி எல்லாம் முடிந்துவிட்டால் எந்திரன் செப்டம்பர் 10 திரைக்கு வருவது நிச்சயம் என்கிறார்கள் சன் பிக்சர்ஸ் தரப்பினர்.
0 comments