நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Entertainment || Feature || Topnews � விஜய் டி.வி-யில் அமலா
விஜய் டி.வி-யில் அமலா
Posted by Editor on 8:26 PM // 0 comments"அமலா -வை கேட்டுப்பாருங்களேன்...." என ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களே அமலாவுடன் ஜோடிசேர காத்திருந்த கதை, பதினைந்து வருடத்திற்கு முந்தைய பிளாஷ் பேக்.
நாகார்ஜூனை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்திற்கு சென்றவர் அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அவரது மகன் நாகசைத்தன்யாவே இப்போது கதாநாயகனாகிவிட்டார். பல வருடங்களாகவே அமலாவை சின்னத்திரையில் மேக்கப் போடவைக்க சேனல்கள் முயன்றன. அமலாவின் முடிவோ நடிப்புக்கு முற்றுப்புள்ளி என்பதாகவே இருந்தது.
பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு அமலாவை சின்னத்திரைக்கு அழைத்து வெற்றி கண்டுள்ளது விஜய் டி.வி. ஆனால் அமலா அரங்கேற்றம் காணப்போவது ஒரு டாக் ஷோ நிகழ்ச்சிதான். 'சூப்பர் மாம்' என பெயரிடப்பட்டிருக்கும் சிறந்த அம்மாக்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சியைதான் நடத்தபோகிறார் அமலா.
0 comments