மாநாடு நடந்து முடிந்து விட்டது .ஆனால் விமர்சனங்கள் முடியவில்லை. ரகுமானின் செம்மொழி மாநாட்டு பாடலில் உள்ள மிக பெரிய தவறை தமிழ் உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் சொல்லும் விவரங்கள் வருமாறு :
"செம்மொழியான தமிழ் மொழியாம்" என்ற பாடலை உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் உச்ச்சரித்துக்கொண்டிருக்கிரார்கள். அந்த செம்மொழி அடையாள பாடலில் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "எனபது கணியன் பூங்குன்றனாரின் வரிகள்.
அதை பாடும்போது இசைக்காக அப்படி பாடினாரா? அல்லது அதன் பொருள் தெரியாமல் பாடினாரா? என்று தெரியவில்லை .ரகு்மான் பெரிய பிழை செய்திருக்கிறார்.'கேளிர்' என்றால் 'உறவினர்கள்' என்று பொருள்.ஆனால் 'கேளுங்கள்' என்று பொருள் பட 'கேளீர்' நீட்டி முழக்கி என்று பாடியிருக்கிறார். பாடலில் உயிரை கொள்ளும் இசை ஆதிக்கத்திற்கு கடுமையான கண்டனங்கள்.ரகுமான் அர்த்தம் தெரியாமல் பாடி கணியன் பூங்குன்றனின் வரிகளில் உள்ள 'மானுட நேயத்தை' பொருளை கொன்று புதைத்திருக்கிறார்.
ரகுமானுக்குதான் பொருள் தெரியவில்லை என்றால் தமிழ் வளர்ச்சித் துறைக்குமா தமிழ் தெரியவில்லை.
அபத்தமான பொருளுடைய அந்த பாடலுக்கு ஒப்புதல் வழக்கியது செவிலக்கியத்திற்கு அவமானம்.
இவ்வாறு அந்த கண்டனம் தெரிவிக்கபப்பட்டுள்ளது .





0 comments