உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதே தமது இலக்கு, என்று பாட்மின்டனில் ஹாட்ரிக் பட்டம் வென்று நாடு திரும்பிய செய்னா நேவல் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடந்த பாட்மின்டன் போட்டியில் மீண்டும் தங்கம் வென்ற சாய்னா நேவல் ஹாட்ரிக் பட்டம் வென்றார். இதற்கு முன்னர் இந்திய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் ஆகிய போட்டிகளிலும் தங்கம் வென்றார். இந்தோனேசியாவில் இருந்து தங்கம் வென்ற சாய்னா இன்று அதிகாலை தாயகம் திரும்பினார். தமிழ்நாடு பாட்மின்டன் அசோஷியேசன் சார்பில் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாய்னா :
இந்த ஹாட்ரிக் வெற்றியை சற்றும் எதிர்பார்க்கவில்லை, இதற்கு எனது மனஉறுதி தான் கைகொடுத்தது. தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள நான், முதல் இடத்திற்கு செல்ல தொடர்ந்து முயற்சிபேன் என்றும் கூறினார். மேலும் உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பட்டம் வெல்வதே தமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.






0 comments