நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cine-News || Feature || Nayan � நான் எதற்கும் கவலைப்படமாட்டேன்:நயன்
நான் எதற்கும் கவலைப்படமாட்டேன்:நயன்
Posted by Editor on 9:52 PM // 0 commentsநான் எதற்கும் கவலைப்படமாட்டேன்:நயன் , நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட என்று ஆரம்பத்தில் சில மலையாள சினிமாவால் துரத்தியடிக்கப்பட்டார் நயன்தாரா. முட்டி மோதி மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்ட போதும் தமிழ் சினிமா கம்பெனிகள் முதலில் அவரை துரத்தியடித்தது. அப்புறம் நடந்த கதையே வேறு. நயன்..நயன்.. என்று தமிழ்,தெலுங்கு, மலையாள சினிமாக்கள் இவரை துரத்தின.
லட்சம் லட்சமாய் சினிமாவில் அவர் சம்பாதித்துக்கொண்டிருந்த போது கோடி கோடியாய் கொட்டித்தருகிறோம் என்று விளம்பரப்பட வாய்ப்புகள் வந்தன. இப்போது மட்டுமல்ல எப்போதுமே விளம்பரப்படங்களுக்கு நோ என்று பிடிவாதமாக இருந்துவிட்டார். அத்தனை பிடிவாதத்திற்கு என்ன காரணம்? ’’நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று அலைந்ததை நான் மறக்கவில்லை.
அதற்காக நான் விளம்பரப்படங்களில் நடிக்க ஒரு போதும் விரும்பியதில்லை. அது என்னை நம்பும் மக்களை ஏமாற்றும் செயல் என்பதால்தான் அதில் எனக்கு விருப்பமில்லை. நான் உபயோகிக்காத ஒரு பொருளை தினமும் உபயோகிப்பதாக சொல்லி நடிக்க என்னால் முடியாது. அப்படி ஏமாற்றிப்பிழைக்க வேண்டிய நிலையில் நான் இல்லை’’ என்று அற்கான காரணத்தை நயன் தன் நெருங்கியவர்களிடம் சொல்லியிருக்கிறார்.
ஆனால் இப்போது நயன் தன் கொள்கையை கொஞ்சம் தூரப்போட்டுவிட்டார். முன்பு தன்னை துரத்திக்கொண்டிருந்த விளம்பரப்படக்காரர்களிடம் பேசி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். பிரபுதேவாவுக்கு பண நெருக்கடியாம். அதை சமாளிக்கத்தான் கொள்கையை தூரப்போட்டுவிட்டாராம் நயன்.
0 comments