For more Photo Gallery click this link FIFA2010 Wavedreamz
உலக கால்பந்து இரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி உலக சம்பியனாக வாகை சூடியது.
ஒக்டோபசின் எதிர்வு கூறலும் பலித்தது. தென்னாபிரிக்காவின் ஜோகனஸ்பேர்க்கில் இன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஸ்பெயினை எதிர்த்து நெதர்லாந்து மோதியது.
போட்டியின் ஆரம்ப நிகழ்விலே நெல்சன் மண்டேலா கலந்து கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் அன்டிறேஸ் லினிஸ்ரா அபாரமான கோல் ஒன்றை அடித்து ஸ்பெயின் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
உதைபந்தாட்டப் போட்டியில் ஸ்பெயினின் முதலாவது உலகக் கோப்பை சம்பியன் இதுவாகும். ஸ்பெயின் இரசிகர்கள் அணியின் வெற்றியை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
For more Photo Gallery click this link FIFA2010 Wavedreamz
0 comments