நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cine-News || Feature || Topnews � செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இடையே காதலா?
செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இடையே காதலா?
Posted by Editor on 10:24 PM // 0 commentsசெல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இடையே காதலா?
பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் செல்வராகவன் - சோனியா அகர்வால் காதல் திருமணம் சமீபத்தில் விவாகரத்தில் முடிந்தது. இதற்கு காரணமாக, செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இடையே ஏற்பட்ட காதல் தான் என்று கூறப்பட்டது.
இந்தக் காதல் கிசுகிசுவினைத் தொடர்ந்து, செல்வராகவன் தன்னுடைய அடுத்த படங்களில் ஆண்ட்ரியா நடிக்க மாட்டார் என்று அறிவித்தார்.
ஆனால், தனது தற்போதைய “மாலை நேரத்து மயக்கம்” படத்தில் ஆண்ட்ரியாவை நாயகியாக்கி உள்ளார்.இதன் மூலம் அவர்கள் காதல் தீவிரமாகி உள்ளது வெளிப்பட்டு இருக்கிறது.
செலவராகவன், தனது “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் ஆண்ட்ரியாவை நடிக்க வைத்தார். மெகா பட்ஜெட்டில் வருடக்கணக்கில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
முதலில் ரகசியமாக இருந்த இவர்கள் விவகாரம் பின்னர் சோனியா அகர்வால் காதுக்கு எட்டியது. இதையடுத்து, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
செல்வராகவன் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதன் பிறகு, செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.
ஆனால், தற்போது தனுசை வைத்து இயக்கும் “மாலை நேரத்து மயக்கம்” படத்தில் ஆண்ட்ரியாவை நாயகியாக்கி உள்ளார் செலவராகவன்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. ஏற்கனவே 14 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
0 comments