நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Entertainment || Topnews � வேலாயுதம் படப்பிடிப்பு 10 ஆயிரம் ரசிகர்கள் முந்நிலையில் ஆரம்பம்
வேலாயுதம் படப்பிடிப்பு 10 ஆயிரம் ரசிகர்கள் முந்நிலையில் ஆரம்பம்
Posted by Editor on 10:09 PM // 0 commentsவேலாயுதம் படப்பிடிப்பு 10 ஆயிரம் ரசிகர்கள் முந்நிலையில் ஆரம்பம் .'சுறா' வின் தோல்வியால் கையை சுட்டுகொண்ட தியேட்டர் அதிபர்கள் நஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு வைத்த வேண்டுகோள்களும் எச்சரிக்கையும் விஜய்யை மில்லிமீட்டர் அளவுக்கும் அசைத்துப்பார்க்க முடியாத நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.
ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் 'வேலாயுதம்' தான் விஜய் அடுத்து மேக்கப் போடப்போகும் படம். 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பிறகு ஆஸ்கார் பிலிம்ஸிற்காக விஜய் நடிக்கும் நடிக்கும் இரண்டாவது படம் இது. விஜய் ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார்.ஜெயம் ராஜா இயக்குகிறார்.
படத்தின் தொடக்கவிழா வரும் 15-ந்தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கவுள்ளது. இவ்விழாவில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் கலந்துகொள்கின்றனர். ரசிகர்கள் முந்நிலையில்தான் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று தயாரிப்பு வட்டாரங்களில் சொல்லப்பட்டாலும், படத்தில் வரும் ஒரு காட்சிக்காக துணை நடிகர்களுக்கு பதிலாக அவர்களை பயண்படுத்திக்கொள்வதுதான் தயாரிப்பாளரின் திட்டம் என கூறப்படுகிறது. இதற்காக விஜய் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தும், விஜய் படம் போட்ட டி.சர்ட் ஒன்றும் கொடுக்கப்படுகிறதாம்.
0 comments