நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cricket || Feature || Sports || Topnews � சாதனை வீரர் முரளிதரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு
சாதனை வீரர் முரளிதரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு
Posted by Editor on 8:39 PM // 0 commentsசாதனை வீரர் முரளிதரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு:(Muralitharan decide to quit from cricket)
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
132 டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் முரளிதரன். இவர் இந்தியாவுக்கு எதிராக ஜூலை 18ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் முழுவதுமாக ஓய்வு பெறப்போவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றம் நிலவுகிறது.
முத்தையா முரளிதரன் ஏப்ரல் 17, 1972, கண்டியில் பிறந்தார். பொதுவாக முரளி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்.
இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் தமிழரான முரளி 2005 ல் சென்னை மலர் மருத்துமனை அதிபர் மகள் மதிமலர் ராமானுதியை திருமணம் செய்துக்கொண்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also read in English
0 comments