நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cine-News || Feature || Topnews � ஹாலிவுட் நடிகை ரீஸ்விதர் ஸ்பூனின் கதையை படமாக தயாரிக்கிறார
ஹாலிவுட் நடிகை ரீஸ்விதர் ஸ்பூனின் கதையை படமாக தயாரிக்கிறார
Posted by Editor on 8:50 AM // 0 commentsபிரபல ஹாலிவுட் நடிகை ரீஸ்விதர் ஸ்பூன், கனடாவில் வாழ்ந்து கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண் ரீனாவிர்க்கின் கதையை படமாக தயாரிக்கிறார்.
1997-ம் ஆண்டு கனடாவிலுள்ள சானிச் நகரத்தைச் சேர்ந்த ரீனாவிர்க், எட்டு பேர் அடங்கிய கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டு அங்குள்ள கிரேக் ப்லொவர் பாலத்திற்கு அடியில் கிடந்த செய்தி கனடா நாட்டு ஊடகங்களால் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த கொலையை வைத்து ரீபெக்கா காட்பரி என்பவர் "அண்டர் தி பிரிட்ஜ்' என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி வெளியிட்டார். இந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதை வெவ்வேறு பாணியில் திரைவடிவும் ஆக்கும் உரிமையை மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதில் ஒரு நிறுவனம் நடிகை ரீஸின் "டைப் எ ஃபிலிம்ஸ்' நிறுவனம்.
ஒரு சிறிய விடலை பட்டாளத்தால் மிரட்டி,பயமுறுத்தி கொலை செய்யப்பட்ட ரீனாவிற்கு அப்போது வயது 14. அந்த இளைஞர்களின் இருட்டு உலகை வெளிச்சம் போட்டு காட்டியது "அண்டர் தி பிரிட்ஜ்' என்ற புத்தகம். அந்த புத்தகத்திலுள்ள சம்பவங்களை எந்த விதத்திலும் சிதைக்காமல் அப்படியே திரைவடிவம் கொடுக்க இருக்கிறோம் என்கிறார் ரீஸின் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஜெனிபர் சிம்ப்சன். அவர் மேலும் கூறுகையில், ""இந்த படத்தில் பிரபலமானவர்கள்தான் தோன்றுவார்கள். ஆனால் ரீஸ் நடிப்பாரா? என்று இப்போதைக்கு கூற முடியாது'' என்றார்.
0 comments