நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Feature || Sports || Topnews � உருகுவேயுடன் வெற்றி பெற்று இறுதிக்கு நெதர்லாந்து
உருகுவேயுடன் வெற்றி பெற்று இறுதிக்கு நெதர்லாந்து
Posted by Editor on 7:45 AM // 0 commentsஉருகுவேயுடன் வெற்றி பெற்று இறுதிக்கு நெதர்லாந்து.
சௌத்ஆப்ரிக்கா:
ஹேப்டவுணில் நடைபெற்ற உருகுவே மற்றும் நெதர்லாந்துக்கிடையான விறுவிறுப்பான உலக கிண்ண அரைஇறுதி காற்பந்து போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அதிரடியாக வெற்றி பெற்றதுடன் 2010 உலக கிண்ண காற்பந்து இறுதிப் போட்டிக்கும் தேர்வானது.
70வது நிமிடம் வரை 1-1 என்ற கோல்கணக்கில் இரு அணிகளும் தமது வெற்றிக்காக தொடர்ந்து போராடின. நெதர்லாந்தின் Wesley Sneijder மற்றும் Arjen Robben ஆகிய வீரர்கள் 3 நிமிட இடைவெளிக்குள் அடித்த கோல்களினால் நெதர்லாந்து அதன் வெற்றியை உறுதிப்படுத்தியது.
போட்டியின் மேலதிக நேரத்தில் (92வது நிமிடத்தில்)உருகுவே ஒரு கோலடித்த போதும் அது பயனில்லாமல் போனது.
உலக கோப்பை போட்டிகளில் எழுபதுகளில் இருமுறை இரண்டாம் இடத்தைப் பிடித்ததும், எண்பதுகளில் ஒருமுறை நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது நெதர்லாந்து.
இன்றைய போட்டியில் நெதர்லாந்து வீரர் Arjen Robben 73 வது நிமிடத்தில் அடித்த கோல் இதுவரை நடைபெற்ற உலக கிண்ண போட்டிகளின் 2200 வது கோலாகும்.
உலக கிண்ண போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு 32 வருடங்களுக்கு பிறகு நெதர்லாந்து 3வது முறையாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி மோதுகின்றது.
0 comments