நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Feature || National || TamilNadu || Topnews � தாஜ்மகாலுக்கு ஆபத்து : ஆய்வில் தகவல்
தாஜ்மகாலுக்கு ஆபத்து : ஆய்வில் தகவல்
Posted by Editor on 5:22 PM // 0 commentsஉலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகாலின் நிறம், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மீண்டும் மங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாக்பூரிலுள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) தாஜ்மகாலை சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: தாஜ்மகாலை சுற்றியுள்ள பகுதியில் காற்று வேகமாக மாசுபட்டு வருகிறது. காற்றில், நைட்ரஜன்-டை-ஆக்சைடு அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. வாகனங்களின் எண்ணிக் கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதிலிருந்து வெளி வரும் புகையால் காற்று மாசடைகிறது. அப்பகுதியில் கடந்த 1996ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு கியூபிக் மீட்டரில் 22 யூஜி அளவு நைட்ரஜன் கலந்திருந்தது தெரிய வந்தது. அது தற்போது, ஒரு கியூபிக் மீட்டரில் 30 யூஜி அளவாக அதிகரித்துள்ளது. அங்கு சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க, அரசு 100 கோடி செலவு செய்தும் பலனில்லை.
0 comments