நமது நாட்டில் மிகவும் விலை குறைந்த காராக வலம் வரும், டாடா மோட்டார்சின் நானோ கார் விலை ரூ.50 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் டெலிவரி 2009ம் ஆண்டு ஜூலை முதல் துவங்கியது. இதுவரை 33 ஆயிரம் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் விலையுள்ள இந்த காருக்கு முன்பதிவு செய்த ஒரு லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள சனாந்த் என்ற இடத்தில் இந்நிறுவனத்தின் பிரமாண்டமான நானோ கார் தொழிற் சாலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு தினமும் 150 கார்கள் என மாதத்துக்கு 4,500 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள பாந்த்நகர் தொழிற்சாலையிலும் இக்கார் உற்பத்தி நடந்து வருகிறது. ஒரு லட்சம் கார்கள் டெலிவரியை எதிர்பார்த்ததற்கு முன்பாகவே, நிறைவேற்றி விடலாம் என்ற எண்ணத்துக்கு இந்நிறுவனம் வந்துள்ளது. இந்த கார்கள் சப்ளை முடிந்த பின், டீலர்கள் ஷோரூம்களில் நானோ கார் விற்பனைக்கு வர உள்ளது. எனினும், இதன் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. எனினும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். குறைந்த பட்சம் 10 முதல் 12 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.
நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Feature || Finance || Sci-Tech || Topnews � டாடா நானோ கார் விலை ரூ.50 ஆயிரம் வரை உயர வாய்ப்பு
டாடா நானோ கார் விலை ரூ.50 ஆயிரம் வரை உயர வாய்ப்பு
Posted by Editor on 10:22 PM // 0 commentsநமது நாட்டில் மிகவும் விலை குறைந்த காராக வலம் வரும், டாடா மோட்டார்சின் நானோ கார் விலை ரூ.50 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் டெலிவரி 2009ம் ஆண்டு ஜூலை முதல் துவங்கியது. இதுவரை 33 ஆயிரம் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் விலையுள்ள இந்த காருக்கு முன்பதிவு செய்த ஒரு லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள சனாந்த் என்ற இடத்தில் இந்நிறுவனத்தின் பிரமாண்டமான நானோ கார் தொழிற் சாலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு தினமும் 150 கார்கள் என மாதத்துக்கு 4,500 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள பாந்த்நகர் தொழிற்சாலையிலும் இக்கார் உற்பத்தி நடந்து வருகிறது. ஒரு லட்சம் கார்கள் டெலிவரியை எதிர்பார்த்ததற்கு முன்பாகவே, நிறைவேற்றி விடலாம் என்ற எண்ணத்துக்கு இந்நிறுவனம் வந்துள்ளது. இந்த கார்கள் சப்ளை முடிந்த பின், டீலர்கள் ஷோரூம்களில் நானோ கார் விற்பனைக்கு வர உள்ளது. எனினும், இதன் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. எனினும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். குறைந்த பட்சம் 10 முதல் 12 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.





0 comments