சென்னையில் நேற்று புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டு, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிருஷன் கூறியதாவது:சென்னை சென்ட்ரல் - கோவை இடையே வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர, ஆறு நாட்கள் பகல் நேரத்தில் துரந்தோ ரயில் இயக்கப்படும். இந்த ரயில் (எண்.2243) சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு கோவை சென்றடையும். கோவையிலிருந்து (எண்.2244) மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.கோவை - திருப்பதி இடையே, வாரத்தில் இரண்டு நாட்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.2758)கோவையிலிருந்து செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு, அன்று மதியம் 1.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். திருப்பதியிலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில் (எண்.2757) மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு கோவை சென்றடையும்.
மதுரை - திருப்பதி இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறை - விழுப்புரம் - வேலூர் - காட்பாடி வழியாக, வாரத்தில் சனி மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6.45 மணிக்கு திருப்பதி சென்றடையும். திருப்பதியிலிருந்து ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.25 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.25 மணிக்கு மதுரை சென்றடையும்.திருச்சி - மங்களூர் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.2653) திருச்சியிலிருந்து வாரத்தில் சனிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.25 மணிக்கு மங்களூர் சென்றடையும். மங்களூரிலிருந்து வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (2654) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு திருச்சி வந்தடையும்.நாகர்கோவில் - பெங்களூருவுக்கு மதுரை - ஓசூர் வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் சனி தோறும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் (எண்.6538) நாகர்கோவிலில் இருந்து, சனிக்கிழமை பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு பெங்களூரு சென்றடையும். . இந்த ரயில்கள் அனைத்தும் விரைவில் இயக்கப்படவுள்ளன.புதுச்சேரியிலிருந்து வேலூர் - புவனேஸ்வர் வழியாக ஹவுராவுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.2868) புதுச்சேரியிலிருந்து வாரத்தில் புதன் கிழமை மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.25 மணிக்கு ஹவுரா சென்றடையும்.ஹவுராவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் கிழமை காலை 8.50 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். இந்த ரயில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது.
காட்பாடி - வேலூர் - விழுப்புரம் அகல ரயில் பாதை பணி முடிந்ததும் இந்த வழியாக இயக்கப்படும்.எர்ணாகுளம் - மும்பை லோகமான்ய திலக் நிலையம் இடையே, வாரத்தில் இரண்டு நாட்கள் "ஏசி' துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலும், கோழிக்கோடு - திருவனந்தபுரம் இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் ஜனசதாப்தி ரயிலும், எர்ணாகுளம் - புனே இடையே, வாரத்தில் இரண்டு நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயிலும் விரைவில் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் - ஹால்தியா இடையே வியாழக்கிழமையும், சென்னை சென்ட்ரல் - நியூ ஜல்பைக்குரி இடையே சனிக்கிழமையன்றும் வாராந்திர ரயில் இயக்கப்படும்.இந்த அட்டவணையில் பொதிகை எக்ஸ்பிரஸ் உட்பட பல ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டிருக்கின்றன. தெற்கு ரயில்வேக்கு நடப்பாண்டில் வருவாய் கூடுதலாக 13 சதவீதம் அதிகரித்திருக்கிறது.இவ்வாறு தீபக் கிருஷன் தெரிவித்தார்.





0 comments