நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cine-News || Entertainment || Feature || Tamil-Review � திலலாங்காடி திரை விமர்சனம்
திலலாங்காடி திரை விமர்சனம்
Posted by Wavedreamz on 3:30 PM // 0 commentsஎதைச் செய்தாலும் அதில் கிக் இருக்க வேண்டும் என்று பார்த்து ரசித்துச் செய்கிறவர் ஹீரோ ஜெயம்ரவி. மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் தமன்னா மேல் இவருக்கு காதல் வர, ஒரு மாதிரியாக கிக்குடன் இவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை வெறுத்துவிட்டு மலேசியாவுக்கு திரும்பிப் போகிறார் தமன்னா. செய்வதில் ஒரு கிக் வேணும்ங்கிறதுக்காக திருடனாகிற ஜெயம்ரவி கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார். அதை அநாதை ஆசிரமங்களுக்குக் கொடுத்து உதவுகிறார். இவரைப் பிடிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரியான ஷாமிடம் ஒப்படைக்கப்படுகிறது. கடைசியில் ஜெயம்ரவியை அவர் பிடித்தாரா? தமன்னாவுடன் இணைந்தாரா என்பதுதான் முழுப் படமும்.
ஆனா இதை சொல்லி முடிப்பதற்குள் ரசிகர்களை ஒரு வழி பண்ணிவிடுகிறார்கள். எதிலும் ஒரு கிக் வேணும் என்று ஜெயம் ரவி சொல்லும் டயலாக் நிமிடத்திற்கு ஒருமுறை வந்துவிடுகிறது. கிக்குடன் ஜெயம் ரவி செய்யும் விஷயங்கள் எல்லா காட்சிகளிலும் தொடர்வதால் ஒரு கட்டத்தில் ‘அட இதைக் கொஞ்சம் நிறுத்துங்கப்பா…’ என்கிற அளவுக்கு கடுப்படிக்கிறது.
ஹீரோ ஜெயம்ரவி ஸ்மார்ட்டாக இருக்கிறார். துறுதுறு வென நிறைய பண்ணுகிறார். சில இடங்களில் ரசிக்கலாம். பல இடங்களில் துறு துறு காட்சிகள் துருபிடித்த காட்சிகளாகியிருக்கின்றன. கதாநாயகியாக தமன்னா. படத்தின் ஓப்பனிங் காட்சியிலேயே இவர் யோகா செய்வதைத்தான் காட்டுகிறார்கள். என்ன ஒரு இன்ரொடக்க்ஷன் காட்சி. படம் முழுக்க இவர் சிரிக்காமலே முகம் முழுவதும் கடுப்புடன் வலம் வருகிறார். இவரும் ஜெயம் ரவியும் காதல் பண்ணும் காட்சிகளெல்லாம் சுத்த போர். இவருக்கு தங்கையாக வரும் நடிகை நல்ல அழகு. படம் முழுக்க தமன்னாவையும் அவர் தங்கையாக வரும் நடிகையையும் தொடை தெரிய நடமாடவிட்டிருக்கிறார்கள். ஜெயம் ரவியின் அப்பாவாக பிரபு, அம்மா சுகாசினி. நல்ல குடும்பம் அது!
காட்சிகளில் தாறுமாறான குழப்பம். காரணம் எடிட்டிங்கா… இல்லை திரைக்கதையா… இயக்குநருக்கே வெளிச்சம். இந்தியாவையும் மலேசியாவையும் மாற்றி மாற்றிக் காட்டுவதால், காட்சி சென்னையில் நடக்கிறதா இல்லை மலேசியாவிலா என்று கொஞ்சம் குழப்பம் ஏற்படலாம்.
படம் முழுக்க கலர்புல்லாக இருப்பதால் அதை கொஞ்சம் ரசிக்க முடிகிறது. கொஞ்சம் ஆறுதல் தருபவர் வடிவேலுதான். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் குலுங்கி குலுங்கி சிரிக்கலாம். அதுவும், இவரது இன்ட்ரொடக்க்ஷன் காட்சி, மன்சூர் அலிகானின் மேல் பைக்கைக் கொண்டு இடிப்பது, காரில் பாம் இருப்பது தெரியாமல் மன்சூர் அலிகான் ஓட்டிச் சென்று வெடிப்பது என சிரிக்க வைக்கும் காட்சிகளுக்கு உத்திரவாதம். இவர்களுக்கு மத்தியில் சந்தானத்தில் அறுவையான காமெடி.
ஓரிரு காட்சிகளில் வந்து போகும் கஞ்சா கருப்பு, மயில்சாமி. எப்ப இருந்து இந்த மாதிரி ரெண்டு மூணு காட்சிகளில் நடிக்க ஆரம்பிச்சீங்க பாஸ்…?
மியூசிக் யாரு? நம்ம யுவன் ஷங்கர் ராஜாவாமே. ஆச்சரியமா இருக்கு. ஒரு பாட்டு கூட உருப்படியா தேறலை. பின்னணி இசை பரவாயில்லை.
காட்சிக்கு காட்சி கிக் கிக் இருக்கணும் என்று சொல்கிறார் ஜெயம் ரவி. ஆனால் படத்தில்தான் மொக்கை தான் இருக்கு..
0 comments