நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cine-News || Entertainment || Feature � ரஜினிகாந்த்தின் எந்திரன் ரெடி பாடல்கள் மிக விரைவில்
ரஜினிகாந்த்தின் எந்திரன் ரெடி பாடல்கள் மிக விரைவில்
Posted by Editor on 11:46 AM // 0 commentsஎந்திரன் பட வீடியோ மற்றும் பாடல்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம். படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வருகிறது. இதுவரை படத்திற்கான செலவு ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளதாம். தமிழகத்தில் 500 தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000 தியேட்டர்களில் எந்திரன் படம் திரையிடப்படவுள்ளதாம். மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 31 -இல் பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும் ஆடியோ ரிலீஸ் இருக்குமாம். படத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என தெரிகிறது.
0 comments