நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cine-News || Feature || Topnews � நண்பர்கள் தினம் அன்று இனிது இனிது(தெலுங்கில் ஹேப்பிடேஸ்)தொடங்குகிறது
நண்பர்கள் தினம் அன்று இனிது இனிது(தெலுங்கில் ஹேப்பிடேஸ்)தொடங்குகிறது
Posted by Editor on 9:53 PM // 0 commentsகல்லூரி வாழ்க்கையின் முதல் நாள் தொடங்கி இறுதியாண்டின் பிரிவு உபச்சார விழா வரை நட்பும், காதலும், மோதலும், ஊடலும், படிப்பும், பல்வேறு கனவுகளுமாகச் செல்லும் கலர்ஃபுல் நாட்களின் காட்சி தொகுப்புதான் இயக்குனர் குகனின் முதல் படமான (தெலுங்கில் ஹேப்பிடேஸ்)இனிது இனிது.
தெலுங்கில் ஹேப்பிடேஸ் என்ற பெயரில் வெளியாகி இளமையான மனசுகளை அதிரச் செய்த படம்தான் தமிழில் இனிது இனிது என மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக காட்சிக்கு காட்சி படத்தை அப்படியே ரீமேக் செய்வார்கள். ஆனால் நான் ஹேப்பிடேஸின் ஆன்மாவை மட்டும் எடுத்துக் கொண்டு ப்ரெஷ்ஷாக திரைக்கதை எழுதியிருக்கிறேன் என்றார் கே.வி.குகன்.
படத்தில் நடித்திருப்பவர்களில் பையா படத்தில் வரும் சோனியா தவிர்த்து அனைவருமே புதுமுகங்கள். ஹேப்பிடேஸ் பாடல்கள் ஆந்திராவையே அதிர வைத்தது என்பதால் அதற்கு இசையமைத்த மிக்கி ஜே.மேயரையே தமிழிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் படத்தை தயாரித்துள்ளது. படம் சிறப்பாக வந்துள்ளதால் அவரே படத்தை சொந்தமாக வெளியிடுகிறார். தேதியும் முடிவாகிவிட்டது. ஆம்… ஆகஸ்ட் 20 ம் தேதி படம் ரிலீஸ்.
அதற்குமுன் ரசிகர்களை நேரடியாக சந்திக்கயிருக்கிறது இனிது இனிது டீம். ஆகஸ்ட் 1ஆம் தேதி ரசிகர்கள் சந்திப்பு தொடங்குகிறது. அன்று நண்பர்கள் தினம் என்பதால் அன்று ரசிகர்கள் மத்தியில் ஆடியோவையும் வெளியிடுகிறார்கள்.
0 comments