நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cricket || Feature || Sports || Topnews � நாட்டிங்காமில் டெஸ்ட் பாகிஸ்தான் வெற்றி பெற 435 ரன்கள் இலக்கு
நாட்டிங்காமில் டெஸ்ட் பாகிஸ்தான் வெற்றி பெற 435 ரன்கள் இலக்கு
Posted by Editor on 11:04 PM // 0 commentsநாட்டிங்காமில் டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் மிரட்ட, பாகிஸ்தான் அணி முன்னணி விக்கெட்டை இழந்து ரன் சேர்க்க திணறுகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட், நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்திருந்தது.
கோலிங்வுட் (81), மார்கன் (125) அவுட்டாகாமல் இருந்தனர். ஆசிப் அசத்தல்: நேற்று 2ம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியை, பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் வேகத்தில் மிரட்டினார். இவரது துல்லிய பந்துவீச்சில் கோலிங்வுட் (82), மார்கன் (130), சுவான் (5), ஜேம்ஸ் ஆண்டர்சன் (0) எல்.பி.டபிள்யு., முறையில் வெளியேறினர். மற்ற வீரர்கள் ஏமாற்ற, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 354 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.
பாகிஸ்தான் சார்பில் முகமது ஆசிப் 5, ஆமீர் 3, உமர் குல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆண்டர்சன் அபாரம்: பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் வீரர்களை, இங்கிலாந்து பவுலர்கள் மிரட்டினர். ஆண்டர்சன் வேகத்தில் இம்ரான் பர்கத் (19), கேப்டன் சல்மான் பட் (1), அசார் அலி (14) வெளியேறினர். அடுத்து வந்த உமர் அமின் (2), உமர் அக்மல் (4), கம்ரான் அக்மல் (0) மூவரும் ஸ்டீவன் பின் வேகத்தில் அவுட்டானார்கள்.
உமர் குல் ஆறுதல்: அடுத்து வந்த முகமது ஆமிர் (25) ஓரளவு ஆறுதல் அளித்தார். தினேஷ் கனேரியா (7), பிராட் வேகத்தில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5, ஸ்டீவன் பின் 3, பிராட் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பிறகு இரணடாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து வீரர்களை, பாகிஸ்தான் பவுலர்கள் மிரட்டினர்.
இங்கிலாந்து அணி 292 /9 எடுத்து ஆட்டத்தை முடித்து கொண்டது.
ப்ரயொர் 102 * குள் 3 /42
பாகிஸ்தான் வெற்றி பெற 435 ரன்கள் இலக்கு ..
0 comments