தனுஷ், ஜெனிலியா, பாக்யராஜ், விவேக், கருணாஸ், ஆஷிஷ்வித்யார்தி, ஜெயபிரகாஷ் ரெட்டி, மாஸ்டர் பரத், மயில்சாமி, ஆர். சுந்தர்ராஜன், விஜய்பாபு, ஸ்ரீநாத், உமா பத்மநாபன், விவேக் வாசு, நித்யா சீதா, உமாராணி, ஆர்த்தி |
|
கமெடி, ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த உத்தமபுத்திரன் படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஃபேமிலி எண்டெர்டெயினராக உருவாகிறது. |
|
தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் "ரெடி". கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டு வசூலில் சாதனை படைத்த "ரெடி" படம் உத்தமபுத்திரன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பாலாஜி ஸ்டூடியோஸ் பிரைவேட் லிட் என்ற படநிறுவனம் சார்பில் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்ட்ரா ஆகியோர் உத்தமபுத்திரன் படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். "ரெடி" தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெனிலியாவே, அதன் ரீமேக்கான உத்தமபுத்திரன் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். 175 நாட்கள் ஒடிய "யாரடி நீ மோகினி" மற்றும் அண்மையில் வெளியாகி வசூலைக்குவித்த "குட்டி" படங்களை இயக்கிய மித்ரன் கே.ஜவஹர். இதன் மூலம் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவராகிறார் இவர். "ரெடி" தெலுங்குப்படத்தில் நடித்த ஜெனிலியா உத்தமபுத்திரன் படத்திலும் தானே கதாநாயகியாக நடிக்க ஆர்வமாக இருந்ததோடு, பாலிவுட்டில் பிஸியான நிலையிலும் உத்தமபுத்திரன் படத்துக்கு உடனடியாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஜெனிலியா கால்ஷீட் கொடுத்ததும் தனுஷீம் தன்னுடைய கால்ஷீட்டை அட்ஜெஸ்ட் செய்து உத்தமபுத்திரன் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஜெனிலியா தவிர பாக்யராஜ், விவேக், கருணாஸ், ஆஷிஷ்வித்யார்தி, ஜெயபிரகாஷ் ரெட்டி, மாஸ்டர் பரத், மயில்சாமி, ஆர். சுந்தர்ராஜன், விஜய்பாபு, ஸ்ரீநாத், உமா பத்மநாபன், விவேக் வாசு, நித்யா சீதா, உமாராணி, ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். கமெடி, ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த உத்தமபுத்திரன் படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஃபேமிலி எண்டெர்டெயினராக உருவாகிறது. சந்திரமுகி, கில்லி, சிவாஜி போன்ற படங்களைப்போல் பல கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமான முறையில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் மிக விரைவில்(இசை: விஜய் ஆண்டணி) |
|
திரைக்கதை, வசனம், இயக்கம்: மித்ரன் கே.ஜவஹர் ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம் இசை: விஜய் ஆண்டணி படத்தொகுப்பு: தியாகு கலை: எம்.பிரபாகர் நடனம்: பாஸ்கர் தயாரிப்பு மேற்பார்வை: அருணாசலம் |
0 comments