நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Feature || Topnews � இந்தி கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்
இந்தி கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்
Posted by Editor on 9:21 PM // 0 commentsதசாவதாரம் படத்தில் நடித்தவர் இந்தி கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இந்தி படங்களில் படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் மல்லிகா. அறிமுகமான காயிஷ் என்ற படத்திலேயே 18 முத¢தக் காட்சிகளில் நடித்தார். அடுத்து, மர்டர் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து பிரபலமானார். ஜாக்கிசானுடன் மித் படத்தில் நடித்தார். இதையடுத்து தசாவதாரம் படத்தில் நடிக்குமாறு கேட்டதும், ‘கமல்ஹாசனின் தீவிர ரசிகை.. நான் கண்டிப்பாக நடிப்பேன்’ எனக் கூறி நடித்தார்.
இப்போது இவர் நடித்து வெளியாக உள்ள ஆங்கில படம் ஹிஸ் ஹாலிவுட், பாலிவுட் கலைஞர்கள் சேர்ந்து இதில் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தில் பெண் உருவம் எடுக்கும் பாம்பாக நடிக்கிறார் மல்லிகா. இப்பட ஷூட்டிங் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. விரைவில் இந்தப்படம் திரைக்கு வர உள்ளது. நடந்து முடிந்த கேன்ஸ் பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ராட்சத மலைப் பாம்புடன் தோன்றினார் மல்லிகா. இப்போது இப¢படத்துக்காக அவர் தந்திருக்கும் ஸ்பெஷல் போஸ், சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், அது மல்லிகாவின் நிர்வாண படம்.
படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக லாஸ் ஏஞ்சல்சில் இருக்கிறார் மல்லிகா. அங்கிருந்து தனது ட்விட்டரில் இந்த படத்தை வெளியிட்டிருக்கிறார். நிர்வாணமாக நிற்கும் மல்லிகா, தலைமுடியால் அரைகுறையாக உடலை மறைத்தபடி போஸ் தந்திருக்கிறார். அவரது உடலில் ச¤ல பகுதிகளில் பாம்பு தோல் போன்ற வடிவம் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டோவை வெளியிட்டு, இது ஓவரா இருக்கா என ரசிகர்களிடம் கேள்வி வேறு எழுப்பியிருக்கிறார் மல்லிகா. ஏற்கெனவே நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆபாச நடனம் ஆடியதாக மல்லிகா மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மல்லிகாவின் இந்த நிர்வாண படத்தால் மீண்டும் சர்ச்சை கிளம்பும் என தெரிகிறது.
0 comments