நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Feature || Finance || Topnews � பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ. 1 உயர வாய்ப்பு
பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ. 1 உயர வாய்ப்பு
Posted by Editor on 10:00 AM // 0 commentsபெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
சமீபத்தில் பெட்ரோல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. இதன்மூலம் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்தப்பட்டது. இந் நிலையில் விலையை மீண்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை லிட்டருக்கு 1 உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் விலையை இப்போது உயர்த்தினால் எதிர்க் கட்சிகளின் அமளியை சந்திக்க வேண்டி வரும் என்பதால், கூட்டத் தொடர் முடிந்த பின் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.
0 comments