நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Feature || Sci-Tech � டாடா டெலிசர்வீஸஸ்:அதிரடி சலுகை
டாடா டெலிசர்வீஸஸ்:அதிரடி சலுகை
Posted by Editor on 12:22 PM // 0 commentsடாடா டெலிசர்வீஸஸ் நிறுவனம் இப்போது உள்ளூர் அழைப்புகளை விட குறைந்த கட்டணத்தில் எஸ்டிடி அழைப்புகளைத் தருவதாக அறிவித்துள்ளது.
இதன்படி டாடாவின் சிடிஎம்ஏ தொழில்நுட்ப செல்போன்களைப் பயன்படுத்துவோர் (ப்ரீபெய்ட்) இனி நிமிடத்துக்கு வெறும் 30 பைசா மட்டும் செலுத்தி எஸ்டிடி (குறிப்பிட்ட வட்டாரத்துக்குள்) பேசிக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்துக்கு உல்டா ப்ளான் என பெயரிட்டுள்ளது டாடா. இதன்படி எஸ்டிடி அழைப்புகளுக்கு 30 பைசாவும், உள்ளூர் அழைப்புகளுக்கு 50 பைசாவும் வசூலிக்கப்படும்.
"அதிக அளவு எஸ்டிடி பேச வேண்டி இருப்பவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டே இந்த வசதியை டாடா அறிமுகப்படுத்துகிறது..." என டாடா டெலியின் வடக்கு - மத்திய தலைவர் வினீத் பாட்டியா கூறியுள்ளார்.
டாடா டெலி நிறுவனம் தனது சிடிஎம்ஏ சேவையை டாடா இண்டிகாம் எனும் பெயரிலும், ஜிஎஸ்எம் சேவையை டாடா டொகோமோ எனும் பெயரிலும் வழங்கி வருகிறது.
இந்த இரு சேவைகள் மூலமாகவும் கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.3 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் 30 சதவீதம் கூட்டவே இந்த புதிய உல்டா ப்ளான் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments