நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cricket || Feature || Sports || Topnews � இந்திய அணி, நியூசிலாந்தை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது:வீடியோ
இந்திய அணி, நியூசிலாந்தை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது:வீடியோ
Posted by Wavedreamz on 1:25 PM // 0 commentsஇந்திய அணி, நியூசிலாந்தை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது:வீடியோ
முத்தரப்பு தொடரின் முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை 105 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் பைனலுக்கு ஜோராக முன்னேறியது.
வெறும் 118 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
ஆகஸ்ட் 28ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. இன்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.
சேவக் அதிரடி ஆட்டம் HQ வீடியோ
மேலும் சினிமா வீடியோ
இந்திய அணியில் பிரக்யான் ஓஜா, ரோகித் சர்மா நீக்கப்பட்டு, முனாப் படேல், விராத் கோஹ்லி வாய்ப்பு பெற்றனர். காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் ஜேக்கப் ஓரம் நீக்கப்பட்டார். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
சேவக் : முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (110), கேப்டன் தோனி (38), ரவிந்திர ஜடேஜா (17) கைகொடுத்தனர். இந்திய அணி 46.3 ஓவரில் 223 ரன்களுக்கு "ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4, நாதன் மெக்கலம் 3, மில்ஸ் 2, மெக்கே ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பிரவீண் அபார பந்து வீச்சு: சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு மில்ஸ் (52) அரைசதமடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற நியூசிலாந்து அணி 30.1 ஓவரில் 118 ரன்களுக்கு "ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் பிரவீண் குமார், முனாப் படேல் தலா 3, ஆஷிஸ் நெஹ்ரா 2, இஷாந்த் சர்மா, ரவிந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
0 comments