நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Entertainment || Enthiran || Feature || Topnews � எந்திரன் டிக்கெட் முன்பதிவு செய்ய | ‘எந்திரன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது
எந்திரன் டிக்கெட் முன்பதிவு செய்ய | ‘எந்திரன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது
Posted by Editor on 10:02 AM // 0 comments‘எந்திரன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பிரமாண்டாமாக தயாரித்துள்ள படம் ‘எந்திரன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யாராய் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல்கள் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்து வந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் படத்தின் ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அக்டோபர் முதல் தேதி வெளிவரும் ‘எந்திரன்’ படம் தமிழ், தெலுங்கு இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. கடந்த வாரமே இந்தப் படத்திற்கான முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளது.
எந்திரன் டிக்கெட் முன்பதிவு செய்ய
இந்நிலையில், தமிழ்நாட்டில் டிக்கெட் முன்பதிவு எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று காலை 9 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவிற்கு கட்டுக் கடங்காத கூட்டம் வருமென்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்ற முன்னேற்பாடுகளை தியேட்டர் அதிபர்கள் செய்துள்ளனர்.
எந்திரன் டிக்கெட் முன்பதிவு செய்ய
0 comments