(எந்திரன் திரை விமர்சனம் (வசீகரன் முதல் சிட்டி வரை )
எந்திரன் அனைத்து வீடியோ பாடல்கள் டவுன்லோட்(Download) செய்ய
எந்திரன் பட டிக்கெட் முன்பதிவு செய்ய
நடிகர்கள் | ரஜினி,ஐஸ்வர்யா ராய் |
இயக்குனர் | ஷங்கர் |
இசை | ஏ ஆர் ரகுமான் |
தயாரிப்பாளர் | சன் பிக்ஸர்ஸ் |
மதிப்பிடு |
படம் பார்த்த பிறகு மனதில் எழும் ஒரே கேள்வி, இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்குமா என்பது தான். ஆனால் இப்படி எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கண் முன் கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
பந்தா, பில்டப் எதுவும் இல்லாத சிம்பிளான ரஜினியை பார்க்க ரொம்பவே புதிதாக இருக்கிறது.
அதற்காக ரஜினி ரசிகர்களின் விரல்களுக்கும் விசிலுக்கும் வாய்ப்பே இல்லையா என யோசிக்க வேண்டாம். எந்திரன் உருவத்தில் வரும் ரஜினி, ரஜினிக்கே உரிய அசாதாரணமான ஸ்டைலில் கலக்கோ கலக்கு என கலக்குகிறார்.
கதை:
ரஜினிகாந்தை நன்கு படித்த கணிப்பொறி வல்லுநராக திரையில் காட்டியதற்காக, ஷங்கரை நிச்சயம் பாராட்ட வேண்டும். பெரும்பாலும் சாதாரண மனிதனாக, கூலித்தொழிலாளியாக, படிக்காத மனிதனாக இருந்து தனது கடின உழைப்பால் முன்னேறும் மேதையாக நாம் பார்த்து பழகிய ரஜினி, இப்படத்தில் படித்த விஞ்ஞானியாக, நாகரீக உடையில் மிடுக்காக தோற்றமளிக்கிறார். எம்.ஜி.ஆர், கமல், சிவாஜி என பலரின் கலவையாக ரஜினி இப்படத்தில் அதிரடி காட்டியுள்ளார்.
ஷங்கர், ஒரே மாதிரியான பாணியினை இப்படத்தில் தவிர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. ரஜினி வாழ்வின்றி தவிக்கிறார், ரஜினி வஞ்சனை புரிகிறார், ஒரு குடிகாரனுக்கு பயந்து ரஜினி ஓடுகிறார், ரஜினி தன்னைத்தானே அக்கக்காக பிரித்தேடுக்கிறார்.
வசீகரனால் உருவாக்கப்படும், ‘சிட்டி ரோபோ’ தனது குழந்தைத்தனமான பண்பால், நேர்மையால், அறிவுக்கூர்மையால், தோற்றத்தால், தனது நகைச்சுவையால் நம் இதயங்களை திருடுகிறது. ‘சிட்டி ரோபோ’ சுட்டிகளின் ரோபோவாக நிச்சயம் பெயர் பெரும். அதே சமயம் உணர்சிமயமான காட்சிகளில் இளம்பெண்களின் கனவுநாயகனாக திகழும்.
ஒரு ‘எந்திரன்’, மனிதன் செய்யும் அத்துனை வேலைகளையும் செய்யத் துவங்கினால்? சந்ததிகளை உருவாக்கத் துவங்கினால்? உணவு கொள்ள, உணவூட்ட துவங்கினால்? அதனை சமூகம் அங்கீகரிக்குமா? மனிதனுக்கும், எந்திரனுக்கும் என்ன வேறுபாடு? ஒரு எந்திர மனிதனுக்கு, தேவைக்கு அதிகமாக அறிவூட்டப்பட்டால் என்ன ஆகும்? போன்ற பல கேள்விகளை இப்படம் நம்முன் வைக்கிறது.
தனது மருத்துவ நண்பர் மூலம், தனது மகள் கர்பம் தரித்திருப்பதை அறிந்து, அதிர்ச்சி அடையும் தந்தை, பலரை அடித்து நொறுக்கும் வேலையில்லாத ஹீரோ போன்ற காட்சிகளை பார்த்து பழகிய நாம் இது போன்று அறிவுபூர்வமான கேள்விகளை பற்றி சந்திக்க, இதுவே சரியான நேரம் என்று தோன்றுகிறது.
இதர விஷயங்கள்
- ‘எந்திரனுக்கான’ இசை அபிரிமிதமானது. இசைப்புயலால் மட்டுமே, இப்படி ஒரு இசையினை உருவாக்க முடியும்.
- ‘அலெக்ஸ் பாண்டியனின்’ நடை, ‘பரட்டையின்’ ஸ்டைல், அதே பிரபலமான சிரிப்பு என பழைய ரஜினியை படத்தில் காணலாம்.
- அனிமேஷன், கிராபிக்ஸ் போன்ற துறைகளில், ஹாலிவுட் படங்கள் அளவுக்கு நாம் இன்னும் சரிவர முன்னேறாததால், சில காட்சிகளில் ‘பொம்மை படங்களை’ பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
- ‘Molecular Dynamics’ பற்றி அறிந்திருந்தால், படத்தின் உச்சக்காட்சியை மிகவும் புகழ்வீர்கள்.
- ஐஸ்வர்யா எதிர்பார்த்தபடியே, சிறப்பாக நடித்திருக்கிறார்.
- உலகின் அனைத்து ரசிகர்களுக்காகவும் ‘Subtitle’ சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம் போல, தமிழ் வார்த்தைகள் மொழிபெயர்க்கப்ப்படாமல், வசனங்களே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- காதல் அணுக்கள், கிளிமாஞ்சாரோ ஆகிய இரண்டு பாடல்களும் தேவையில்லாது திணிக்கப்பட்டுள்ளன
0 comments