நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Entertainment || Feature || Topnews � விஜய் 'கில்லி' படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார் பிரபுதேவா
விஜய் 'கில்லி' படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார் பிரபுதேவா
Posted by Editor on 9:53 PM // 0 commentsநடிகை நயன்தாராவுடனான கள்ள காதல் விவகாரத்தால் மனைவி ரமலத் போட்ட வழக்கு, இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மகளிர் அமைப்புகளின் எதிப்பு என தற்போது பரபரப்பாக பேசப்படுகிறவர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் பிரபுதேவா. இவர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாத் தெறியவில்லை, படு கெத்தாகவே இருக்கிறார் மனுஷன். தற்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றிபெற்ற “போக்கிரி படத்தை சல்மான் கானை வைத்து “வாண்டட் என்ற பெயரில் ரீமெக் செய்து வெற்றி கண்டவர் பிரபுதேவா.
இந்த முறையும் மீண்டும் ஒரு விஜய் படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார் பிரபுதேவா. தரணி இயக்கத்தில் விஜய் நடித்து பட்டயகிளப்பிய “கில்லி படத்தை அபிஷேக் பச்சனை வைத்து இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார். “கில்லி, “போக்கிரி ஆகிய இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஹிட்டடித்த படங்கள். போக்கிரியை இந்தியில் ஹிட்டாக்கிய பிரபுதேவா, இந்த முறை கில்லியை ஹிட்டாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தை அபிஷேக் பச்சனின் சொந்த நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.
தமிழில் இவர் இயக்கியுள்ள “எங்கேயும் காதல் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக ஹன்ஷிகா நடித்துள்ள இந்த படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏ.ஜி.எஸ்.எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
0 comments