பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் முக்கியமானவராக கருதப்படும் ஆறடி உயர அல்வாத்துண்டு சமீரா ரெட்டி புதிய படமொன்றில் நக்சலைட் கேரக்டரில் நடித்து வருகிறார். ரெட் அலர்ட் என்ற அந்த இந்திப்படத்தில் நடிக்க ரொம்பவே சிரமப்படுகிறாராம் அம்மணி.
இதுபற்றி அவர் அளி்ததுள்ள பேட்டியில் :
என் முகம் ரொம்ப சாப்ட்டானது. பால் வடியும் இந்த முகத்துல ஆக்ரோஷத்தை கொண்டு வரணும்னா அது கஷ்டம்தானே. கையில் துப்பாக்கியை வெச்சிக்கிட்டு பயங்கரமா கத்தணும். என்னோட கேரக்டரை சொன்ன உடனேயே ரொம்ப யோசிச்சேன். நமக்கு இந்த கேரக்டர் சரிப்பட்டு வருமான்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர் தந்த நம்பிக்கையில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன், என்று கூறியிருக்கிறார்.
படத்தில் இடம்பெறும் கற்பழிப்பு காட்சி பற்றி கேட்டதற்கு, அது ரொம்பவே சோகமான காட்சி. எந்தவொரு பெண்ணுக்கும் அப்படியொரு நிலைமை வரக்கூடாது. ரெட் அலர்ட் படத்தில் லட்சுமி என்ற பெண்ணாக வரும் என்னை போலீஸ்காரர்கள், போலீஸ் நிலைய கழிவறையில் வைத்து கற்பழித்து விடுகிறார்கள். அதன் பின்னர்தான் நான் நக்சலைட் இயக்கத்தில் சேர்த்து பழிவாங்குவேன். கற்பழிப்பு காட்சி படமாக்கப்பட்ட போது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.
ஒரு நாள் முழுவதும் அப்செட்டில் இருந்தேன். வீட்டில் நான் அமைதியாக இருப்பதை பார்த்த என் பெற்றோர் என்ன, ஏதுவென்று விசாரித்தார்கள். சூட்டிங் காட்சி பற்றி கூறியபோது அவர்களும் வருத்தப்பட்டார்கள். கவர்ச்சி கேரக்டர்களால் கிடைக்காத பெயர் நக்சலைட் பெண் கேரக்டரால் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன், என்கிறார் சமீரா ரெட்டி.

0 comments