நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Ajit || Anuska || Cine-News || Entertainment || Feature || Topnews � அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் இணைகிறார் அனுஷ்கா
அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் இணைகிறார் அனுஷ்கா
Posted by Editor on 8:18 PM // 0 commentsவிஜய், சூர்யாவைத் தொடர்ந்து அடுத்து அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் இணைகிறார் அனுஷ்கா. சூர்யாவுடன் இணைந்து நடித்து வெளியான சிங்கம், அனுஷ்காவை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்போது அடுத்த சூப்பர் நடிகரான அஜித்துடன் இணையவுள்ளார் அனுஷ்கா. அஜித் நடிக்க வெங்கட்பிரபு இயக்க, தயாநிதி அழகிரி தயாரிக்கவுள்ள மங்காத்தா படத்தில் அஜித்துக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா. நேற்றுதான் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாராம். முன்னதாக சமந்தா என்பவர் இந்தப் படத்தின் நாயகியாக பேசப்பட்டிருந்தார். அப்போது படத்தை இயக்குவதாக இருந்தவர் கௌதம் மேனன். ஆனால் மேனன் படத்திலிருந்து தூக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சமந்தாவையும் தூக்கி விட்டு அனுஷ்காவைக் கொண்டு வந்துள்ளனராம். உண்மையிலேயே சிங்க நாயகி அதிர்ஷ்டக்காரர்தான்!
0 comments