நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Entertainment || Feature || Tamil-Review || Topnews � ஆனந்தபுரத்து வீடு -பேய் வீடு -விமர்சனம்
ஆனந்தபுரத்து வீடு -பேய் வீடு -விமர்சனம்
Posted by Editor on 12:43 PM // 0 commentsஷங்கரின் தயாரிப்பு என்றாலே எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் “ஆனந்தபுரத்து வீடு” ட்ரைலர் அசத்தலில் எதிர்ப்பார்ப்பு இன்னும் எகிறி இருந்தது. ஆவிகளின் பிள்ளை பாசம் என்ற வித்தியாசமான கதை கோணத்தில் படம்.
சென்னையில் தொழிலதிபராக இருக்கும் நந்தா, அவரின் காதல் மனைவி சாயாசிங், அவரது வாய் பேச முடியாத மகன் ஆனந்த். அவருக்கு ஏற்படும்தொழில் நஷ்டத்தால் கடன் காரர்களின் தொல்லையால் தனது சொந்த ஊருக்கு வந்து அவரின் பூர்வீக வீட்டில் தங்குகிறார். அங்கு ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை அவரின் வாய் பேச முடியாத மகன் ஆனந்துக்கு தெரிய வருகிறது. இதே நேரத்தில் கடன் காரர்களும் இவர்களை வீட்டுக்காவலில் வைக்கிறார்கள். இதனால் நந்தா குடும்பம் படும் அவஸ்தையும் அதில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறர்கள் என்பதும்தான் படத்தின் கதை.
சரி வாங்க விரிவாக பார்க்கலாம்:
ஆவி தொல்லைகளால் அலறல்புரமாக இருக்கும் வீடு ஆனந்தபுரமாக மாறுவதே கதை. மர்மதேசம் புகழ் நாகா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு.
இறந்துபோன பெற்றோர் தன் பிள்ளை மேல் இருக்கும் பாசத்தினால் அந்த வீட்டையே சுற்றி வருகிறார்கள். அது எதற்காக என்பதை ஒரு காரணத்தோடு முடிக்கிறார் இயக்குனர்.
சென்னையில் பிஸ்னஸ் நடத்தி வரும் பாலா பெருத்த நஷ்டம் அடைகிறார். இவரின் மனைவி ரேவதி. பாலாவும் ரேவதியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அழகான பிள்ளை ஆனந்த். ஆனந்துக்கு வாய் பேச முடியாது.
பிஸ்னஸ் லாசாகி கடன்தொல்லை அதிகரித்துவிட சென்னையைவிட்டு கிராமமான தன் சொந்த ஊருக்கே தன் மனைவி பிள்ளையோடு சென்றுவிடுகிறார் பாலா. கடன்காரர்கள் இவரை கண்டுபிடித்து இங்கேயும் வந்து தொல்லை கொடுக்கிறார்கள்.
இப்படி இருக்கும் சூழலில் வீடுக்குள் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பது சிறுவன் ஆனந்துக்கு தெரியவர திகில் துவங்குகிறது. கதவுகள் தானாய் மூடுவதும். பொருட்கள் தானாய் நகர்வது என மர்மங்கள் தொடர்கிறது. இந்த மர்மங்களால் அதிர்ந்துபோகிறது குடும்பம். வீட்டை விட்டு வெளியேரவும் முடியாமல், வீட்டில் இருக்கவும் முடியாமல் தவிக்கிறது குடும்பம்.
பாலாவின் சின்ன வயதில் அவர் பெற்றோர் விபத்தில் இறந்துவிடுகின்றனர். தனிமையில் வளரும் பாலா, அப்பா அம்மா பாசத்தின் ஏக்கத்தில் வளர்கிறார். சென்னையில் வளரும் அவர் மீண்டும் தன் சொந்த இடத்திற்கு வருகிறார். பிள்ளை மேல் அதிகமான பாசம் வைத்திருக்கும் பாலாவின் பெற்றோர் அந்த வீட்டிலேயே ஆவியாய் அலைகிறார்கள்.
இந்த ஆவி சேஷ்டைகள் செய்வது தன் அப்பா அம்மா தான் என யூகித்துக்கொள்கிறார் பாலா. பேய்விரட்டும் சாமியார்களை வீட்டுக்கு வரவழைத்து பூஜைகள் செய்கிறார். பாசத்தினால் அலையும் பேயை அவ்வளவு எளிதில் விரட்ட முடியாது என்று சாமியார்கள் கைவிட, என்ன செய்வது என புரியாமல் ஆவிகளிடம் மல்லுகட்டி தவியாய் தவிக்கிறார் பாலா. பின் ஆவிகளால் நமக்கு தொல்லையில்லை, அவைகள் நமக்கு உதவியாய்தான் இருக்கிறது என்று தன் மனைவிமூலம் தெரிந்துகொள்கிறார்.
பாலாவின் குடும்பத்தை ஆவிகள் ஒருபக்கம் துரத்த, வில்லன்கள் ஒருபக்கம் துரத்த, அட சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு சஸ்பென்ஸ். நண்பன் என நினைத்த ஜீவா பாலாவிடமிருந்தே இரண்டு கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதும், பாலாவிற்கு பிஸ்னஸில் லாஸ் இல்லை என்பதும் தன் பெற்றோரின் ஆவிகள் மூலமாகவே பாலாவிற்கு உண்மை தெரிய வருகிறது. ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வர, ஆவிகளும் வீட்டை விட்டு சென்றுவிடுகிறது.
இத சொல்லத்தான் இவ்வளவு நேரமாச்சான்னு கொஞ்சம் கடுப்பு வந்தாலும், ஆவிகள் செய்யும் கலாட்டா நல்லாதான் இருக்கு. அம்மிக்கல் ஆடுவதையும் ஆப்பச்சட்டி நகர்வதையும் தமிழ் சினிமா எப்பவோ பார்த்த விஷயமாச்சே. வேற எதாவது புதுமையான பேய் சேஷ்ட்டைகளை காண்பித்திருக்கலாம்.
மர்மதேசத்தின் இயக்குனர் என்பதால் இன்னும் நிறையவே எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். படத்தின் பல காட்சிகளில் யாருக்குமே பயம் வரவில்லை, பிறகு என்னப்பா பேய் படம்!
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாமே சீரியல் கணக்கா நகர்கிறது. கதையில் ஆவிகளோடு சேர்த்து மொத்தம் பத்து கதாபாத்திரங்கள்தான். நடிகர்களைவிட வீட்டில் உள்ள நாற்காலி, முக்காலி, தட்டு, டம்லர், ஊஞ்சல், கார்பெட் என எல்லாம் படத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க.
ஆனந்தபுரத்து வீடு -பேய் வீடு
Watch Trailer and download மொவீஸ்
0 comments