ஐதராபாத் : ஐதராபாத் - கோலாலம்பூர் இடையேயான விமான சேவையை ஏர் ஆசியா விமான நிறுவனம் துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, ஏர்ஆசியா விமான நிறுவன உயர் அதிகாரி ஜாஸ்மின் லீ இன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : இந்த ஐதராபாத்-கோலாலம்பூர் இடையிலான விமான சேவை, வாரத்திற்கு 4 முறை இயக்கப்பட உள்ளதாகவும், இந்த புதிய சேவையை பிரபலப்படுத்தும் பொருட்டு, அறிமுகச்சலுகையாக, கட்டணம் ரூ.4 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சேவை, ஜூலை 20 முதல் ஆகஸ்டு 31 வரை செல்லத்தக்கது என்றும், ஜூலை 5 முதல் 8ம் தேதி வரை இந்த சேவைக்கு முன்பதிவு செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். விரைவில், கோல்கட்டா-பாங்காங், டில்லி - பாங்காங் சேவை துவக்க உள்ளதாகவும், ஏர்ஆசியா நிறுவனம், தற்போதைய அளவில் இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, சீனா, தைபே, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 72 நாடுகளில் 132 வழித்தடங்களில் விமானங்களை இயக்கி வருவதாகவும், இந்த நிதியாண்டில், 16 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமலர்





0 comments